ஆந்திராவில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாததை கண்டித்து மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஸ்க்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆந்திராவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தற்போதை மருத்துவம் மற்றும் சுகாதார துறை செயலாளருமான கிருஷ்ண பாபு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் துவாரகா திருமலா ராவ் தற்போதைய ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநருமான ஐ.பி.எஸ். அதிகாரிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தவில்லை என குறி நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் ஒரு மாதம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் 16ம் தேதிக்குள் நீதிமன்ற பதிவாளர் முன்பு சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக சிறைக்கு அனுப்ப நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. உத்தரவுகளை நிறைவேற்றும் பொறுப்பு உயரதிகாரிகளுக்கு உள்ளது என்றும், உத்தரவுகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் தெரிவித்து காலக்கெடுவை நீட்டிக்கக் கோர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர, மூன்று போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் ஆந்திர உயர் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே மீறுவதாக குற்றச்சாட்டினர். போக்குவரத்து கழகத்தில் களப்பணியாளராக பணிபுரிந்து வரும் சித்தூரை சேர்ந்த பி.சுரேந்திரா மற்றும் 3 பேர் தங்களது சேவையை முறைப்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வாதங்களை கேட்ட நீதிமன்றம் ஊழியர்களை முறைப்படுத்தவும், அவர்களின் சம்பளத்தில் 7% வட்டியை மனுதாரர்களுக்கு வழங்கவும் ஆகஸ்ட் 2022 இல் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. போக்குவரத்து கழக தரப்பு வழக்கறிஞர் மேல்முறையீடு மனு நிலுவையில் உள்ளதாக வாதிட்டனர். டிவிஷன் பெஞ்ச் மேல்முறையீட்டுக்கு தடை விதிக்கவில்லை என்பதை உயர்நீதிமன்றம் நினைவு கூர்ந்து அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கிறோம் எனக்கூறியது.
உயர்நீதிமன்ற உத்தரவை ஆந்திர அரசு மதிக்காததால் நூற்றுக்கணக்கானநீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. அரசின் அலட்சியத்தால் அரசுப் பணியாளர்கள் நீதிமன்றங்களை சுற்றித் திரிகின்றனர். ஏற்கெனவே மூத்த ஐ.ஏ.எஸ்., தலைமை செயலாளர், டி.ஜி.பி., உள்ளிட்டோரும் பலமுறை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது குறிப்பிடத்தக்கது.