ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி..!! 471 நாட்கள் சிறை..!! ஜாமின் கிடைக்க காரணமே அவர் தான்..!!
கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிகையின் நகல்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் இன்று வர உள்ள நிலையில் வழக்கில் இதுவரை வைக்கப்பட்ட வாதங்கள் கவனம் பெற்று வருகிறது.. கடந்த மாதம் இந்த வழக்கின் மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது..
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.. 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது..
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞ்சர் (செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்) என்.ஆர்.இளங்கோ நீண்ட போராட்டத்திற்கு பின் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.. அதே சமயம் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது..
அதாவது திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்திற்கு இரு நாட்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி சென்று கையெழுத்திட வேண்டும்,
25 லட்சம் ரூபாய்க்கு இருவர் உத்திரவாதம் வழங்க வேண்டும்,
சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது
போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.. அதற்கு செந்தில் பாலாஜி ஒப்புக்கொண்ட பின்னரே செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க முடியுமா..? இல்லை அதற்கும் ஏதேனும் தடைகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு செந்தில் பாலாஜி இனி அமைச்சராக பொறுப்பேற்று அவரது வேலையை செய்யலாம் அதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறினார்.,
அதன் பின்னர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அவரது சொந்த மாவட்டமான கரூர் மற்றும் பொறுப்பு அமைச்சராக இருந்த கோவையில் திமுக நிர்வாகிகள் சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..