செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டது செல்லும்..!! உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு..!!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதி மன்றத்தின் உத்தரவிற்கு தடையில்லை.., என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சட்ட விரோதமாக செயல்பட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்தனர். இதனால் செந்தில் பாலாஜியின் மனைவி மணிமேகலை சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதன் பெயரில் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க தொடங்கியது. அதன் பெயரில் இன்று தீர்ப்பும் வெளியிட்டுள்ளது. செந்தில் பாலாஜியை, அமலாக்க துறையினர் கைது செய்தது சட்ட பூர்வமானது என்றும், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல எனவும் தீர்ப்பு அளித்துள்ளது.
உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் மனைவி மேகலா உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..