விசாரணைக்கு வந்த செந்தில் பாலாஜி வழக்கு..!! உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!
அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், நாளை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ முறையீடு செய்துள்ளார்.
எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு அக்டோபர் 10ம் தேதி மேல் முறையீடு செய்யப்பட்டது.
அதன் பின் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடா்பாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில், அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அக் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 22-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 33-வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் வங்கி தொடர்பான சில ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி மனு மீது மீண்டும் வாதிட அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக செந்தில் பாலாஜியை வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..