செந்தில் பாலாஜியின் கோவை வீட்டில் ரெய்டு..!! டாஸ்மாக் மேனேஜர் வீட்டில் புகுந்த ED..!!
அதிமுக ஆட்சியில் இருந்த போது.., போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி அதாவது 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை. 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொறியாளர்கள் பணி நியமானத்தின் போது சில முறைகேடுகளை செய்துள்ளார்.
பணம் வாங்கி கொண்டு வேலை கொடுக்க மறுத்து விட்டதாக அவர் மீது சில குற்றச் சாட்டுகள் எழுந்தது. எனவே புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏமாற்றுதல், சதி மற்றும் ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுக்கள் அனைத்தும் செந்தில் பாலாஜிக்கு எதிராக உத்தரவு
வெளியானது . எனவே அதன் பெயரில் அவரை கைது செய்து விசாரணை நடத்த புலனாய்வுதுறை நேற்று செந்தில் பாலாஜியை கைது செய்ய திட்டமிட்டது. கைது செய்ய சென்றபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின் ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி, மனுவை மேல் முறையீடு செய்து இருந்தார். அப்போது செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பல இடையூறுகளை கொடுத்துள்ளார்.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை தற்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக (தெற்கு) ஒன்றியச் செயலாளர் வீரா.சுவாமிநாதன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர் 5பேர் கொண்ட குழுவை வைத்து கொண்டு அமலாக்கதுறை அதிகாரிகள் சாமிநாதன் வீட்டில் சோதனை செய்தனர். இந்த சோதனை ஆனது இன்று காலை முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் அம்பாள் நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தை அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நிதிநிறுவனம் மற்றும் சின்ன ஆண்டாங் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் கடை உட்பட அனைத்து இடங்களிலும் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் கோவை இராமநாதபுரம் பகுதியில் டாஸ்மார்க் சூப்பர்வைசர் முத்து பாலன் வீட்டிற்கு சென்ற அமலாக்கத் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி புதிதாக கட்டி வரும் கோவையை சேர்ந்த அருண் அசோசியேட் என்ற நிறுவனத்திலும் அமலாக்கதுறை சோதனை.., அந்த சோதனையில் புதிதாக கட்ட பட்டு வரும் நிறுவனம், வீடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..