செந்தில் பாலாஜி வழக்கறிஞர் வைத்த கோரிக்கை..!! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலைதாங்கி தருவதாகக் கூறி பணமோசடி வழக்கில் ஈடுபட்டார்.. அதன் பேரில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.. ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு போராடி வருகிறார்.
இன்று அந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படதற்கு பல எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு விசாரணையையே தொடங்காத நிலையில் இதே வழக்கின் கீழ் அமலாக்கத்துறை எப்படி விசாரணையை தொடங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
ஆகையால் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யக் கூடாது என விவாதிட்டார். இந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு இந்த விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்திற்கு வரவுள்ளதால் இந்த விசாரணையை மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் வக்கீல் சோயிப் ஹுசைன் ஆஜராகி, “பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜிக்கும், சண்முகம், கார்த்திக் குறித்த 38 ஆதரங்களை சமர்ப்பித்தார்.. மேலும் ஊழல் வழக்கு விசாரணை நடைபெறாமல், பண மோசடி தடுப்பு சட்ட வழக்கு விசாரணையை நடத்தி தண்டிக்க முடியுமா..? என்று கேள்வியும் எழுப்பினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்