மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி..!!
புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக இன்று காலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத செயல்பட்ட குற்றத்திற்காக அமலாக்க துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.. பின் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக காவிரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது செந்தில் பாலாஜியின் மீதுள்ள வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் ஜாமீன் மனு கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த சூழலில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை நெஞ்சுவலி காரணமக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு திடிரென, ரத்தக்கொதிப்பு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ பரிசோதனைக்காக வீல் சேரில் கொண்டு செல்லப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜிக்கு ரத்தம், இசிஜி, எக்கோ பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதற்காக சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
கால் மரத்துப்போனதால் சிறையில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக வீல் சேர் மூலம் அழைத்து வரப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பின் மீண்டும் செந்தில் பாலாஜியை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லவோம் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..