“கோவா பழங்குடிகளுக்கு தனி சட்டசபை தொகுதி” நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்..!
கோவா மாநிலத்தில் கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்தம் 14.58 லட்சம் மக்கள் தொகை இருப்பதாக ஒரு புள்ளிவிரம் சொல்லியது.. அதில் தலித்துகள் (எஸ்சி SC) 25,449 பேரும்., பழங்குடியின மக்களின் எண்ணிக்கை 1,49,275 பேரும் கோவாவின் பெர்னெம் சட்டசபை தொகுதியில் தனித் தொகுதியாக தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்டது.., ஆனால் பழங்குடிகளுக்கான சட்டசபை தொகுதிகள் எதுவும் இல்லை என சொல்லப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்னரே கோவா சட்டசபையில் பழங்குடிகளுக்கும் பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கிடைப்பதற்கான தனி சட்டசபை தொகுதியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதேசமயம் தங்களுக்கு தனி சட்டசபை தொகுதி உருவாக்காவிட்டால் லோக்சபா தேர்தல் புறக்கணிப்போம் என கடந்த தேர்தலில் பழங்குடியின மக்கள் எச்சரித்திருந்தனர்.
அதனால் கடந்த மார்ச் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, அந்த கூட்டத்தில் கோவா மாநில சட்டசபை தொகுதிகள் பட்டியல் பழங்குடியினர் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பிற்கு வகை செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த மசோதாவில், கோவா மாநிலத்தின் பழங்குடியினரின் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதி வாரியாக மறுவரையறை ஆணையம் வெளியிடப்பட்டது. அதில் சட்டங்களை திருத்தம் செய்யவும், கோவா மாநிலத்தின் சட்டசபையில் உள்ள இடங்களை மாநிலப் பட்டியலில் பழங்குடியினருக்கு மறுசீரமைப்பு செய்வதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு சட்டம் இயற்றுவது இன்றியமையாதது என அறிவித்தது.
இதனால் கோவா சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி அதன் மூலம் கோவா சட்டசபையில் பழங்குடியினருக்கு முறையான பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாடாளுமன்றதில் மற்றும் சட்டசபை தொகுதிகளில் எல்லை நிர்ணய ஆணை பிறப்பிக்கப்பட்டது, கடந்த 2008ம் ஆண்டில் தேவையான சட்ட திருத்தங்களைச் செய்ய வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என அறிவிக்கப்பட்டது.
தற்போது, கோவாவில் 3 ஜாதிகளை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்த்து தனி சட்டசபை தொகுதியை உருவாக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.