விமானத்தில் வந்தவர்களுக்கு தனி முகாம்!

துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை வந்த 56 பேரை மருத்துவக் கண்காணிப்புக்காக தாம்பரம் சானிட்டோரியம் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை விமானநிலையத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர் விமானங்களில் வந்த 13 பெண்கள் உள்ளிட்ட 56 பேரை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் 56 பேரையும் தாம்பரம் சானிட்டோரியத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமுக்கு மருத்துவ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் பெரும்பாலானோர் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் என்பதோடு, அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மகன், மகள்களோடு தங்கியிருந்துவிட்டு திரும்பியவர்கள் என்பதாலும் அவர்களை சிறப்பு மருத்துவ கண்காணிப்புக்கு அனுப்பி வைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

‘Work From Home’ ஒரு மாத காலத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கும் BSNL!

வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – வைகோ