பாலியல் வீடியோ விவகாரம்..! ஜாமீன் கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா..! பரபரப்பான கர்நாடக..!
ஜெர்மனியில் இருந்து கர்நாடக திரும்ப உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய போவதாக கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹாசன் தொகுதி எம்.பியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
கர்நாடகாவை உலுக்கிய பாலியல் வீடியோ :
தனது வீட்டில் வேலை செய்யும் பெண்கள் உட்பட பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இவர் செய்த மோசடிகள் குறித்து அந்த பணி பெண் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் பின் பிரஜ்வல் ரேவண்ணா மீது மூன்று காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாயை பாலியல் வன்கொடுமை செய்த பிரஜ்வல் ரேவண்ணா படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்ட வீடியோ :
வழக்கு பதிவு செய்த பின் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, நாட்டை விட்டு வெளியேறி சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, வருகிற மே 31ம் தேதி தனக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகப் போவதாகக் கூறி உள்ளார் .
அந்த வீடியோவில் பிரஜ்வல் ரேவண்ணா பேசியதாவது. முதலில் நான் என தாய், தந்தை, தாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் இருக்கும் இடத்தை தெளிவுபடுத்தவே இந்த வீடியோவை. லோக்சபா தேர்தல் முடிந்ததும், பல்வேறு காரணங்களுக்காக என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எஸ்ஐடி அமைக்கப்பட்டது.
எனது வெளிநாட்டுப் பயணத்திற்கும் இந்த வழக்குகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம். எஸ்ஐடி எனக்கு நோட்டீஸ் கொடுத்து அதற்கு என் வழக்கறிஞர் மூலம் பதில் அளித்துள்ளேன்.
குறிப்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு எதிரான வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது வாழ்க்கையை முடிக்க தற்போது அரசியல் சதி நடந்து கொண்டு இருக்கிறது. அதை நான் எதிர்கொள்வேன் என பிரஜ்வல் ரேவண்ணா அந்த வீடியோவில் இவ்வாறே பேசியுள்ளார்.
கடந்த மே மாதம் 27ம் தேதி வெளிநாட்ற்கு தப்பி சென்று தலைமறைவாகி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவை நீண்ட தேடலுக்கு பின் அவரை கண்டு பிடித்துள்ளனர். இதனால் பிரஜ்வல் ரேவண்ணா நாளை மறுநாள் இந்தியா வர உள்ளார்.
அதே சமயம் அவரது வழக்கறிஞ்சர் மூலம் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு ரேவண்ணா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய போவதாக கர்நாடக சிறப்பு புலனாய்வு குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த தகவலை கேட்டதும் மதசார்பற்ற ஜனதாகளம் கட்சியினரால் கர்நாடக முழுவதும் பரபரப்பாகி உள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..