சஷ்டி 7ம் நாள் வழிபாடு..!! விரதம் நிறைவடைய இதை செய்தால் போதும்..!!
வினையாக இருந்தாலும் கந்தன் அருள் இருந்தால்.., வந்த வினையெல்லாம் விலகி விடும் என்று சொல்லுவார்கள். முருகருக்கு பல விரதங்கள் இருந்தாலும் முக்கியமானதாக சொல்லப்படுவது கந்த சஷ்டிவிரதம் தான்.
கந்தசஷ்டி விரதத்தை பல முனிவர்களும், தேவர்களும் இருந்த விரதம், சுப்பிரமணியருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய மந்திரம் இடம்பெரும். சஷ்டி என்பது திதி விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டி தேவியை விரும்புபவன் என்றும் பெயர்..
இன்று சூரசம்ஹாரம் முடிந்து இரண்டாவது நாள் என்றும் சொல்லலாம்., மற்றும் சஷ்டியில் 7ம் நாள் என்றும் சொல்லலாம்..
சஷ்டி விரதம் இருப்பவர்கள் இன்றுடன் விரதத்தை நிறைவு செய்யும் நாள் என சொல்லலாம்.. அப்படி 7ம் நாளில் விரத்தை முழுமையாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
சஷ்டி நாளில் காலை முதல் மாலை வரை அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து, காலை மாலை கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். காலை, மாலை வீட்டில் விளக்கு ஏற்றி தீப ஆராதனை செய்ய வேண்டும்.
மதியம் வேளையில் முருகப்பெருமானுக்கு சாதம், சாம்பார், பருப்பு வடை, பாயசம் ஒரு கூட்டு பொரியல், செய்து வாழை இலையில் வைத்து படையல் இட வேண்டும்…
அப்படி செய்தால் நேற்று திருக்கல்யாணம் செய்துக்கொண்ட முருகர்., வள்ளி, தெய்வானையோடு உங்கள் வீட்டுக்கு வருகை தந்து உங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்வார் என்பது நம்பிக்கை..
அப்படி செய்தால் கணவன் மனைவி இடையே சண்டையில்லா அன்பான சந்தோஷமான வாழ்க்கை அமையும்… என்பது ஐதீக உண்மை.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..