இவள் உலக அழகியே.. இளமையும் ஜானுவும்..!!
தமிழ் சினிமாவில் இன்றும் இளமையுடன் இருக்க கூடிய நடிகைகள் யார் என்று பார்த்தால் பலர் நினைவிற்கு வருவார்கள்.. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அவரின் நடிப்பும் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரும் நினைவிற்கு வருவாங்க..
அப்படி பார்த்தால் “ஜானு” என்று சொன்னாலே நினைவிற்கு வருவது நடிகை “த்ரிஷா” மட்டுமே.., நடிகை த்ரிஷா இன்றுவரை இளமையுடன் இருக்க காரணம்.., என்ன நாம் திரையில் பார்த்த த்ரிஷா விற்கும். திரைக்கு பின் உள்ள த்ரிஷா பற்றி படிக்கலாம் வாங்க…
சினிமா மீது ஆர்வமுள்ள நடிகை த்ரிஷா தமிழில் முதன் முதலில் நடித்த படம் தான் “ஜோடி” ஆனால் இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து இருப்பார். அதன் பின் முதன் முதலில் ஹீரோயினாக நடித்த படம் தான் “மெளனம் பேசியதே”..
அதிலும் இந்த படத்தில் வரும் “என் அன்பே ஏன் அன்பே, என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி” என்ற பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது.., ஆனால் த்ரிஷாவிற்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை.., தொடர்ந்து த்ரிஷாவிற்கு பட வாய்ப்புகள் வந்தாலும் அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.
2003ம் ஆண்டு வெளியான “லேசா லேசா” படம் ஓர் அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என சொல்லலாம்.. அதற்கு காரணம் அந்த படத்தில் வரும் இந்த பாடல்.
“அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே”
இந்த பாட்டை விட இந்த பாட்டு நல்லா இருக்கேனு சொல்லுறா மாதிரி இருக்கும் இந்த பாடல்
“நல்ல மனம் உன் போல் கிடையாது..,
என்ற பாடலும் சரி படமும் சரி நல்ல வரவேற்பை பெற்றது.. அதன் பின் நடிகை த்ரிஷாவிற்கு பல பட வாய்ப்புகளும் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது… சாமி படத்தில் கியூட் ஆன ரியாக்ஷன் காட்டி அசத்தி இருப்பார்..,
இது எல்லாம் ஒரு நடிப்பா.., நடிப்பு என்றால் இப்படி தான் இருக்கும் என சொல்லும் அளவிற்கு வந்த படம் தான் “கில்லி“.
2004ம் ஆண்டு வெளியான “கில்லி” திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.., அதன் பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக “த்ரிஷா” பெரும் உச்சிக்கு சென்றார்.
அதன் பின் வெளியான ஆறு, திருப்பாச்சி, ஜீ, போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வெளியானது.
ஒரு சில படங்கள் இவரை விட யாரும் பெஸ்டா நடிக்க முடியாதுனு சொல்லும் அளவிற்கு வந்த படம் தான் “உனக்கும் எனக்கும்” இந்த படத்தில் த்ரிஷாவின் நடிப்பு ரொம்ப இயல்பாகவும் கிராமத்து பெண்ணாகவும் நடித்து இருப்பார்.
ஹீரோயினாக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருந்த நடிகை “த்ரிஷா” ஹீரோயினாகவும் மகளாகவும் நடித்த படம் தான் “அபியும் நானும்” அப்பா மகளின் அன்பை அழகாக சொன்ன ஒரு திரைப்படம் என்றும், 0 ஹேட்டர்ஸ் உள்ள திரைப்படம் என்றும் சொல்லலாம்..
இதுவரை நான் படித்த படங்களில் நீங்கள் என்னை பார்த்து ரசித்ததை விட இந்த படத்தில் என் நடிப்பு அட்டகாசமாக இருக்கும் என சொல்லும் அளவிற்கும் இன்று வரை நம்மால் மறக்க முடியாத ஒரு படம் என்று சொன்னால் அது “விண்ணை தாண்டி வருவாய்” திரை படம் மட்டுமே..
இந்த படத்தில் த்ரிஷாவை விட வேற யாரும் பெஸ்ட் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார் குறிப்பாக இந்த பாடலில்..
“கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்..,
வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன் மன்னிப்பாயா அன்பே…”
இதற்கு முன் நடித்த படங்களை விட இந்த படத்தில் த்ரிஷாவிற்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.., இந்த படத்திற்காக த்ரிஷாவிற்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது..
ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்லை என்று சொல்லும் அளவிற்கு “விண்ணை தாண்டி வருவாய்” என்ற படம் ஒரு சிறந்த காதல் படம் என சொல்லுவதற்குள்.., அதை விட இது தான் உண்மையான காதல் என சொல்லும் அளவிற்கு வெளியான படம் தான் “96”..
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது என சொல்லலாம்.., அதே சமயம் ரசிகர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு சிறந்த காதல் படம் என சொல்லலாம்..
தன்னை சிறுவயதில் இருந்தே காதலித்த ஒரு பையன் திருமணம் கூட செய்துக்கொள்ளாமல் இன்று வரை தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் காதலனை திருத்தும் முன்னால் காதலியின் நடிப்பை விளக்கி சொல்லும் ஒரு சிறந்த படம் என சொல்லலாம்..,
இந்த படம் ரசிகர்களிடம் பெரும் அளவில் பாதிப்பை ஏற்ப்படுத்தியது மட்டுமின்றி இன்று வரை.., “ஜானு” கதா பாத்திரத்தை மறக்க முடியாத அளவிற்கு தன் நடிப்பை த்ரிஷா வெளிப்படுத்தி இருப்பார்..
இந்த ஒரு படத்தில் மட்டும் த்ரிஷாவிற்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மொழிகளில் 65க்கும் மேற்படங்களில் நடித்துள்ளார்.., இதுவரை அவர் வாங்கிய விருதுகளின் எண்ணிக்கை மட்டும் 40 என சொல்லலாம்..,
என்றும் இளமையுடனும் தமிழ் சினிமாவின் குயின் ஆக இருக்கும் “த்ரிஷா“விற்கு மதிமுகம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..