அமித்ஷா காணாமல் போய்விட்டார்; சிவசேனா விமர்சனம்!

டெல்லி வன்முறையின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணாமல் போய்விட்டார் என சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில், டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்தபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரத்துக்கு நீண்டநேரம் ஒதுக்கினார். வீடு வீடாக சென்று பா.ஜ.க., வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார்.

ஆனால், டெல்லியில் நடந்த வன்முறையில் பல உயிர்கள் பறிபோன போதும், பொது சொத்துகள், தனியார் சொத்துகள் நாசப்படுத்தப்பட்ட போதும் அமித் ஷாவை எங்கும் காண முடியவில்லை என்று கூறியுள்ளது. இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியோ மத்தியில் ஆட்சியில் இருந்து, எதிர்க்கட்சியாக பாஜக இருந்திருந்தால் உள்துறை அமைச்சர் பதவி விலகக்கோரி அழுத்தம் கொடுப்பதற்காக பெரியளவில் கண்டன பேரணியையும் அக்கட்சி நடத்தியிருக்கும். ஆனால், இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை.

டெல்லி வன்முறை

ஏனெனில், பாஜக ஆட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கிறது என்று சாம்னா விமர்சித்துள்ளது. இருப்பினும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். டெல்லியில் நடந்த இவ்வளவு பெரிய வன்முறை குறித்து மத்திய அரசு காலதாமதத்துடன் பதில் அளிக்கிறது.

அஹமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்க அமித் ஷா சென்றிருந்த நேரத்தில்தான், டெல்லியில் உளவுத்துறை அதிகாரி வன்முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வன்முறை நடந்து 3 நாட்களுக்கு பின்னர்தான் பிரதமர் மோடி அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் என்று சிவசேனா கட்சி, தனது சாம்னா தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.

What do you think?

Corona Virus : 3,000-த்தை நெருங்கும் உயிர்பலி!

நடிகர் ரஜினியுடன் ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்திப்பு