February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending இந்தியா

அமித்ஷா மிகுந்த வேதனையில் இருப்பார்: சிவசேனா கிண்டல்!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை துவம்சம் செய்த ஆம் ஆத்மி பிரமாண்ட வெற்றி பெற்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா, கெஜ்ரிவாலை எதிர்கொள்ள தெரியாமல் பாஜக குழப்பத்தில் உள்ளதாக கூறியுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது தொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பாரதீய ஜனதா தனது அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அண்டை மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் ஆகியோரை பிரசாரத்துக்கு கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் அனைவரையும் தனி ஆளாக எதிர் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுவிட்டார்.

பா.ஜ.கவின் பிரித்தாளும் சூழ்ச்சியில் விழுந்து விடாமல் டெல்லி மக்கள் வாக்களித்து உள்ளனர். டெல்லியின் சட்டம்- ஒழுங்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தலில் பயனளித்துவிட்டது. டெல்லியில் மோசமான சட்டம்-ஒழுங்கு குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குற்றம் சாட்டியதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். மேலும், டெல்லியில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிட்டியுள்ளது.

ஆம் ஆத்மியின் இந்த வெற்றியின் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கொள்ள வழி தெரியாமல், பா.ஜ.க குழம்பி போய் உள்ளது. மராட்டியத்தில் பாரதீய ஜனதாவுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்காமல் போனதும், டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தோல்வியும் அமித்ஷாவை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கும் என சாம்னாவின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

“சேவை வரி விதிப்பது தவறு” – ஏ.ஆர்.ரஹ்மான் மனு!

Digital Team

3 பில்லியின் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்து – டிரம்ப்

superadmin

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு வெறும் கானல் நீரா? – வைகோ கேள்வி

Digital Team

சென்னை-மைசூருக்கு மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில்!!!

Digital Team

சென்னை ஷாஹின்பாக், மெரினா புரட்சி போல் உருவெடுக்க வாய்ப்பு? – முதலமைச்சர் ஆலோசனை

Digital Team

சச்சின் தெண்டுல்கருக்கு லாரியஸ் விருது

Digital Team
You cannot copy content of this page
Madhimugam