திங்கள் கிழமை சிவன் வழிபாடு..! இந்த மந்திரத்தை சொன்னால் கிடைக்கும் வரம்..!!
திங்கள்கிழமை சிவனுக்கு உகுந்த நாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும், திங்கள்கிழமை அன்று சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால், கேட்ட வரம் கிடைக்கும் என்று கடந்த வார கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.
நாம் வாழ்க்கையில் தெரிந்து செய்யும் பாவங்களை விட, தெரியாமல் செய்யும் பாவம் தான் அதிகம். அப்படி நாம் தெரியாமல் செய்யும் பாவத்தை போக்க, மனதார சிவனை வேண்டி, இந்த சிவ மந்திரத்தை சொன்னால், அனைத்து பாவங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.
சிவன் மந்திரம் :
நமச்சிவாய வாழ்க,
நாதன் தாள் வாழ்க,
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க,
கோகழி ஆண்ட குருமணி தான் தாள் வாழ்க,
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி,
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது,
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யஞ்சாய தீமஹி,
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்,
இந்த மந்திரத்தை திங்கள்கிழமை, சிவராத்ரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் கோவிலுக்கு சென்று பிராத்தனை செய்து வழிபட்டால் பாவ வினைகள் நீங்கி விடும்.
சிவனுக்கு சோம வாரம் விரதம் இருந்தால், கிடைக்கும் பலன் பற்றி உங்களுக்காக. வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று, அசைவம் சாப்பிடாமல் இருந்து, சிவனுக்கு சோமவாரம் விரதம் இருந்து வந்தால்,
* எமன் பற்றிய பயம் நீங்கும்.
* இதயம் சம்மந்தப் பட்ட நோய்கள் நீங்கும்.
* தோஷங்கள் நீங்கி விடும்
* மாங்கல்ய வரம் கிடைக்கும்.
மேலும் சிவனுக்கு வில்வம் இல்லையால் அர்ச்சனை செய்தால்,
* ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கும்.
* 1000 பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
* வில்வத்தால் அர்ச்சனை செய்பவர்களுக்கு, சிவலோகம் செல்வார்கள்.
முக்கியமாக திங்கள் கிழமை அன்று, ஆகாரம் எதுவும் அருந்தாமல் விரதம் இருந்து, சர்வ தோஷ நிவரத்தீஷ்வரரை கிரிவலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..