வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி… சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு..!
தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான சுங்கக்கட்டணம் ஏப்ரல் மாதமே மாற்றி அமைக்கப்பட வேண்டிய நிலையில் மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜூன் மாதம் தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை மாற்றி அமைக்கப்பட்டு 5 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தியது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் (செப்.1) முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா ஆகிய 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.