பட்டபகலில் காத்திருந்த அதிர்ச்சி..!! கைவரிசை காட்டிய திருடன்…!!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கோளூர் கிராமத்தில் மாதவன் என்பவரது வீட்டில் 3.3/4 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கபணம் திருட்டு. திருப்பாலைவனம் காவல் துறையினர் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே கோளூர்கிராமத்தில் வசிப்பவர் மாதவன். நேற்று தனது சகோதரி வீட்டிற்கு தனது குடும்பத்தாருடன் சென்ற நிலையில் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டும் வீட்டினுள் அறைகள் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பீரோவில் திறந்து பார்த்த போது அதில் 3.3/4 சவரன் தங்க நகையும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும், ஒரு செல்போனும் திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக திருப்பாலைவனம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் சம்பவத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.