உத்தர பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்…!
திப்ருகர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரெயிலின் 12 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது.
உத்தர பிரதேச மாநிலத்தில் சண்டிகர்- திப்ருகர் நகருக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று மதியம் சண்டிகரில் இருந்து திப்ருகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரெயிலின் 12 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது.
கோண்டா மாவட்டத்தில் மோதிகஞ்ச் மற்றும் ஜிலாஹி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்தபோது ரெயில் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில் ரெயிலின் 4 ஏசி பெட்டிகள் உள்பட 12 பெட்டிகள் கவிழ்ந்துள்ளதாக தகவல் வெளியானது. உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து சென்றுள்ள நிலையில், விரைந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..