ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை… பக்தர்கள் பங்கேற்பு..!
நெமிலி அருள்மிகு ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று விளக்கு ஏற்றி வழிபாடு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் அமைந்துள்ள ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் நெமிலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்துசுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வாழை இலையில் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதில் வேத பண்டிதர்கள் வேதமந்திரங்களை முழங்க 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாங்கல்ய பாக்கியம் குழந்தை பாக்கியம் உடல் ஆரோக்கியம் மன நிம்மதி கடன் பிரச்சனை உள்ளிட்ட வேண்டுதல்களை வேண்டி திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்.
மேலும் இதில் ஊஞ்சல் பொன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
-பவானி கார்த்திக்