மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரை உலக ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் ஹீரோவாகவும் இந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் விளங்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி இயக்கத்தில் மெகா154 திரைப்படத்திலும் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் ஸ்ருதிஷாசன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சிரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.