எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு …!என்ஐஏ அதிகாரிகள் சோதனை

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைதான தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்த வழக்கில், சென்னை, சேலம், திருச்செந்தூர், கடலூர், நெய்வேலி, பரங்கிப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரியில் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தவுபிக், அப்துல் சமீம் ஆகிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 2 தீவிரவாதிகளும், பல்வேறு ஊர்களில் சிலரிடம் பேசி உள்ளதோடு, அவர்களுக்கு சிம் கார்டு சப்ளை செய்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மூன்று குழுவாகப் பிரிந்து சேலம் வந்தனர்.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் சிலரிடம் விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையை முடித்து கொண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதிக்கும் சென்று அங்கும் சிலரிடம் விசாரணை செய்தனர்.

என்ஐஏ அதிகாரிகள் சோதனை…!

இரண்டாவது நாளாக இன்று காலை சேலம் டவுன் பகுதியில் முகமது புறா சந்து பகுதியில் வசிக்கும் அப்துல் ரஹ்மான் என்பவர் வீட்டில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்ததாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் வீட்டில் 3 அதிகாரிகள் குழு இன்று அதிகாலை 5 மணியளவில் சோதனை நடத்தியது. பின்னர் அந்த வீட்டருகே உள்ள மொபைல் லேண்ட் என்ற செல்போன் கடையிலும் சோதனை செய்தனர்.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. செல்போன் கடையில் இருந்து சிம் கார்டுகள் யார் யாருக்கு விற்கப்பட்டது என்ற பட்டியலை பெற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சோதனையின்போது அசம்பாவிதங்களை தவிர்க்க சேலம் டவுன் காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கடலூர், தூத்துகுடி மாவட்டங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

What do you think?

இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி அபார வெற்றி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள் விழா…!