சித்தரா இருந்தாலும் பொண்டாட்டிக்கு..? வாசகர் பக்கம்- 1
எப்பவும் வேலை வேலைனு இருக்க நம்ப மூளைக்கு கொஞ்சம் நேரம் ஓய்வு கொடுத்த மட்டும் போதாது.., அந்த மூளையை கொஞ்சம் Stress இல்லாமலும் பாத்துக்கணும்.., அதுக்காக தான் நம்ப மதிமுகம் கொண்டு வந்து இருக்கு கடி ஜோக்..
ஒருவர் போன்ல ஐயா நீங்க வாழும் சித்தர் அரவிந் ஐயா தானே என்றார்..
திடீர்னு பின்னாடி திரும்பி பார்த்தா தலைக்கு பின்னாடி ஒரு போக்கஸ் லைட் எரியுது
அப்படியே நானும் ஒத்துக்கிட்டேன்
என்ன பன்ன சொல்ரீங்க கொஞ்ச நாளைக்கு நாமளும் சித்தரா வாழ்ந்து பாக்கலாம்னு சின்ன ஆசை தான்.
கொஞ்ச நேரத்தில், என் மனைவி போன் செய்து ஏங்க வரும் போது தக்காளி வெங்காயம் வாங்கிட்டு வாங்கனு சொன்னாங்க..
திரும்பி பார்த்த போக்கஸ் லைட்ட காணோம். என்ன கொடுமை பார்த்தீங்களா
அப்ப தான் புரிஞ்சது வாழும் சித்தராவே இருந்தாலும் கூட பொன்டாட்டி போன் பண்ணா சித்தம் தெளிஞ்சி இயல்பான நிலைக்கு வந்துடுது…
கொஞ்ச நேரம் கூட நம்மால சித்தரா வாழ முடியலன்ற விரக்தில தக்காளி வெங்காயத்தோட சேர்த்து கொஞ்சம் கொத்தமல்லி கருவேப்பிலை குடப்பானு கடக்கார தம்பிட கேட்டு வாங்கினு வீட்டுக்போய்டேன்…
-வீர பெருமாள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..