சித்தார்த் மிஸ் யூ படம் அப்டேட்…!!
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தார்த்., அதன் பின்னர் தீயா வேலை செய்யனும் குமார், உதயம் NH4, அரண்மனை, போன்ற பல படங்களில் நடித்துள்ளார் தமிழில் மட்டுமின்றி தெழுங்கிலும் இவர் பேமஸ் என சொல்லலாம்…
சித்தார்த்தின் சித்தா, இந்தியன் 2 படங்களை அடுத்து சித்தார்த்தன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ் யூ. காதல் கதையாக உருவாக இருக்கும் இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பாலசரவணன், லொள்ளு சபா மாறன் உட்பட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
ஜிப்ரான் இசையமைப்பு உள்ள இந்த படத்தை ஜீவா நடித்த களத்தில் சந்திப்போம் என்ற படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கியிருக்கிறார். வருகிற 29ஆம் தேதி திரையிடப்படும் இந்த படத்தில் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சித்தார்த், ஆஷிக்க ரங்கநாத் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட உள்ளது