சிம்பு – சேரன் புதிய கூட்டணி; மேஜிக் செய்யுமா?

சிம்புவும் இயக்குநர் சேரனும் புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கிய இப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது சிம்பு நடித்து வருகிறார். மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரன், உதயா, மனோஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

இதையடுத்து சிம்பு நடிக்கும் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சிம்புவை சந்தித்த சேரன், அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். அதனை ஒகே செய்துள்ள சிம்பு மாநாடு படம் முடிந்ததும் புதிய படத்தை தொடரலாம் என சேரனிடம் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘திருமணம்’ படத்திற்கு பிறகு சேரன் இயக்கவுள்ள படம் இது என்பதோடு, இப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

What do you think?

‘பிகில்’ பாண்டியம்மாவின் வைரல் போட்டோஸ்

மாநிலம் தழுவிய PUBG போட்டி; அதிர வைத்த மோசடி?