சீண்டிய தயாரிப்பாளர் – நச் பதிலடி கொடுத்த சமந்தா..!
சென்னை: சமந்தா நடிப்பில், சாகுந்தலம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பெரும் அளவில் வெற்றி பெறவில்லை எனவே இயக்குனர் குணசேகர் மற்றும் படக்குழுவினர் வருத்தத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் சிட்டிபாபு சமந்தாவை கிண்டல் செய்து சமூகவலைதளத்தில் போஸ்ட் செய்திருக்கிறார்.
அதில் அவர் சொல்லியிருப்பது : சமந்தா வெறும் பணத்தேவைக்காக தான் நடிக்கிறார். படத்தின் கதையை கேட்டு நடிக்கமால், பணம் கிடைத்தால் போதும் என்று இருக்கிறார். அதனால் தான் புஷ்பா படத்தில் ” ஊ அண்டவா என்ற பாடலுக்கு சம்மதித்தார் போல. இப்படியே, போனால் “இளம் நடிகைகள் எல்லாம் டாப்பில் சமந்தா டவுனில்” என கூறியிருக்கிறார்.
இதனை கண்ட சமந்தா அதற்கு பதில் அடி கொடுத்திருக்கிறார்.
சமந்தா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் தயாரிப்பாளர் சிட்டிபாபு பேசியதற்கு, ஒரு போட்டோவை போட்டு “காதில் முடி வளர்க்க தெரிந்த சில மனிதர்களுக்கு, நல்ல மனதை வளர்க்க தெரியவில்லை”. என பதிவிட்டிருந்தார்.
பலரும் அதற்கு விளக்கம் தெரியாமல் கமென்ட் செய்துள்ளனர். அதற்கான உண்மை காரணம் சிட்டிபாபுவின் காது ஓரத்தில் முடி வளர்ந்து இருப்பதால் அவ்வாறு கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து ரசிகர்களிடம் பேசிய சமந்தா, யசோதா படம் வெற்றி அடைந்ததை போல சாகுந்தலம் வெற்றி பெரும் என நான் நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை போல இந்த படம் எனக்கு அமையவில்லை என கண்ணீருடன் பேசியுள்ளார் சமந்தா.