ஆல் ஏரியாவில் ஐயா கில்லி..!! இப்போவே வசூல் ஸ்டார்ட்..!! தியேட்டர் டிக்கெட்..?
தளபதி படம் என்றால் அது ஹிட் என சொல்ல வைக்கும் அளவிற்கு அவரது படங்கள் இருக்கும்.., ஒரு சில படங்கள் FLOP என்றாலும் அவரின் அடுத்த படத்தில் ஹிட் கொடுத்திருப்பார்..
தமிழ்நாட்டிற்கு அழகிய தமிழ் மகன் என்றால்.., இவர் படங்கள் எப்போது ரசிகர்களுக்கு குஷி.. காரணம் இவருடைய ப்ரண்ட்ஸ் எப்போது இவருக்கு சப்போர்ட் என்று சொல்லலாம்.., இன்றைய யூத் களிடம் காதலுக்கு மரியாதை கொடுக்க சொன்னவர்.
இவரின் மீது பலரும் அன்பு வைத்தாலும் இவருக்கும் பிரியமானவள் என்று ஒருவர் இருக்கிறார்.
ஒரு குருவி பறந்து சென்ற போது சுறாவிடம் சிக்கிய போது உதவியது என்னவோ அவரின் நண்பர்கள் தான்., ஒவ்வொரு பாடலும் ஒன்ஸ் மோர் கேட்க வைத்தாலும் பூவே உனக்காக நான் காத்திருக்கிறேன் என்று சொன்னார்.., இவரை கண்டால் துள்ளாத மனமும் துள்ளும் என ரசிகர்கள் சொல்ல காரணம்.., என்று இவர் ரசிகர்களை “நெஞ்சில் குடி வைத்திருப்பதால்” தான்.
லவ் டுடே வந்தாலும்.., தன்னை காதலிக்காத பெண்ணை வேறு ஒரு ஷாஜகனிடம் சேர்த்து வைத்து காதலை வாழ வைத்தவர்.., காதலுக்கு மரியாதை கொடுக்க தெரிந்த இவர் என்றும் இளைஞர்களின் சிறந்த தலைவா என வாழ்கிறார்.
இவரின் சர்க்கார் பலருக்கும் பிடிக்காமல் போனாலும் இவரின் கத்தி வேற ரகம் என்பதால் என்றும் இவர் மெர்சல் நாயகன் என சொல்லலாம்..,
இப்படி பல பாவணங்களாக நம்மை ரசிக்க வைத்த வசீகர நாயகன் தற்போது கில்லியாக மீண்டும் வர இருக்கிறார்.
தரணி இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் மீண்டும் ரசிகர்களுக்காக வரும் ஏப்ரல் 20ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உட்பட பலரும் நடித்துள்ளனர்..,
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாரம் “டியர்” மற்றும் “ரோமியோ” ஆகிய இரு தமிழ் படங்கள் வெளியானது ஆனால் ஒரு சில படத்திற்கு தியேட்டரில் கூட்டம் இல்லை என சொல்லலாம் ஆனால் அதை அடித்து நொறுக்கும் விதமாக கில்லி படத்தின் டிக்கெட் முன் பதிவு தொடங்கியுள்ளது.
புதிய படங்களை ஒரு நாளைக்கு முன்பு டிக்கெட் புக்கிங் செய்யும் நிலையில் கில்லி படத்தின் ரீ ரிலிஸுக்காக டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கி விட்டதாக கமலா சினிமாஸ் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 3000 டிக்கெட்டுகள் விற்பனை செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது., டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரத்திலேயே 3000 டிக்கெட் விற்பனை என்றால் இன்னும் பட ரிலீஸ் ஆன பின்..? எந்த அளவிற்கு இருக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்..
மேலும் கில்லி படத்தின் டிக்கெட் விலை 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், ரசிகர்கள் பலரும் கில்லி படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் புத்தாண்டு தினமான இன்று விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் முதல் பாடல் வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடியுள்ள ‘ஆர் யூ ரெடி‘ பாடல் வெளியானால் அது தனி ரெக்கார்டை யூடியூபில் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.