உலகக் கோப்பை கிரிக்கெட் தூதராக சிவகார்த்திகேயன் நியமனம்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு விளம்பர தூதராக நடிகர் சிவகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்துள்ளது. அதற்காக பெண்கள் கிரிக்கெட் போட்டி குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த சிவகார்த்திகேயனை அணுகியது. இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் சிவகார்த்திகேயன் இந்த போட்டியின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

What do you think?

தீனதயாள் உபாத்யாய சிலையை திறந்து வைத்தார் மோடி

ஆர்சிபியின் கூல் லோகோ – பும்ரா கிண்டல்