February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending சினிமா

இங்கு ஜீரோவான சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’, தெலுங்குல சக்தி-யாக போகுதாம்!

சிவகார்த்திகேயன், அர்ஜூன் நடித்து தமிழில் வெளியான ஹீரோ படம் தெலுங்கில் சக்தி என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜூன், ரோபோ சங்கர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்த படம் ஹீரோ. யுவன்சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப் பெரிய தோல்வியை தழுவியது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சாதிக்க துடிக்கும் மாணவர்களின் கனவுகள் எப்படி சூறையாடப்படுகிறது என்பதை திரைக்கதையாக கொண்ட இப்படம், ஒருவகையில், ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் போன்று இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது.

மேலும், ஹீரோ படத்தின் கதை திருடப்பட்டது என்ற உதவி இயக்குநரின் புகாரை அடுத்து இது பஞ்சாயத்துக்கும் போய் அதன் பின்னரே வெளியானது. இந்நிலையில் தற்போது ஹீரோ திரைப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியாகவுள்ளது. ‘சக்தி’ என்ற பெயரில் வெளியாகவுள்ள இப்படம் தெலுங்கிலாவது வெற்றி பெறுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கெனவே சிவகார்த்திகேயனின் சில திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சச்சின் தெண்டுல்கருக்கு லாரியஸ் விருது

Digital Team

92-வது ஆஸ்கர் விருது பட்டியல் – ஜோக்கரை முந்திய பாராசைட்

Digital Team

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு

Digital Team

அமித்ஷா மிகுந்த வேதனையில் இருப்பார்: சிவசேனா கிண்டல்!

Digital Team

இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை! – CAB

Digital Team

‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ – விஜய் சேதுபதியின் கலக்கல் ட்வீட்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam