‘பிளான் பண்ணி பண்ணனும்’ படக்குழுவுடன் இணையும் சிவகார்த்திகேயன்!

ரியோ நடிக்கும் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கிய ரியோ ராஜ் தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் தற்போது பத்ரி இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்து உள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ரோபோ ஷங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நாளை இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குனர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

What do you think?

‘கேரளாவில் 3 வயது குழந்தைக்கும் கொரோனா’ பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

மோடிக்கு காங்கிரஸ் கட்சி எழுதிய எதிர்ப்பு கடிதம்?