தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானான நடிகர் கௌண்டமணியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் பரவிவருகிறது. இந்த தகவலால் சினிமா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பழனிசாமி வாத்தியார் என்ற திரைப்படத்தில் நடிக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் இளம் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகரான சிவகார்த்திகேயன் தற்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. மிக நீண்ட இடைவெளிக்கு கவுண்டமணி நடிக்க இருப்பதாலும் இந்த படத்தில் அவரின் தீவிர ரசிகரான சிவ கார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இதுகுறித்தான அதிகார்வபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது