சிவகாசி பத்ரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா
தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை முதல் தமிழகம் எங்கும் அனைத்து கோவில்களிலும் கோலாகளமாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவகாசியில் பத்ரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த மே 3 ம் தேதி தொடங்கிய இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் வீதி உலா சென்று மக்களுக்கு காட்சி கொடுப்பார்.
மே 3ம் தேதி, முதல் நாள் பூ அலங்காரத்திலும்,
மே 4ம் தேதி, இரண்டாம் நாள் சிம்ம அலங்காரத்திலும் காட்சி கொடுத்தார்.
அதேப் போல் நேற்று இரவு பிரம்மாண்டமாக காட்சி கொடுத்துள்ளார். மற்றும் காளீஸ்வரி குழு சார்பில் சிவன், விநாயகர், பத்ரகாளி, என பிரமாண்ட சிலைகள் வடிவமைக்கப்பட்டு ஊர்வலம் சென்றுள்ளனர்.
இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து. தரிசனம் செய்து சென்றார்கள். இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெறும் எனவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழா குழுவினர் பூஜை செய்வார்கள் எனவும் தெரிவித்தனர்.
மேலும் இது போன்ற பல தெய்வீக தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி