மாநிலங்களவை தேர்தல் – 6 பேரும் போட்டியின்றி தேர்வு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் சேய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, அந்த இடங்களை நிரப்புவதற்காக திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், ஆகியோரும், அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி முனுசாமி, த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

What do you think?

இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

கொரோனா வைரஸ்; மத்திய அரசுக்கு ராகுல் எச்சரிக்கை!