நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு திட்டம்…!
நமது முதலமைச்சர் அவர்களால், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சியாக வளர்ந்து வருகிறது.
பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) கணிசமான அதிகரிப்பைக் காண முடியும் என்ற நம்பிக்கையால் இது இயக்கப்படுகிறது.
இந்தத் திட்டமானது, சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை அங்கீகரிக்கிறது.
நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் அர்த்தமுள்ள உயர்கல்வி படிப்புகளைத் தொடர அதிகாரம் அளிப்பதாகும். இதன் நோக்கம் மாற்றத்தக்கது அல்ல..
BUILDING INFORMATION MODELING :
அந்த வகையில் பெ.தெ.லீ செங்கல்வராயர் நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “BUILDING INFORMATION MODELING” பற்றிய 6 நாட்கள் அடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம் (FDP) 18.06.24 முதல் 24.06.24 வரை நடைபெற்றது. தொடக்க நாளான நேற்று (18.6.24) செயலாளர் திரு. எம்.சம்பசிவம் அவர்கள் நிறுவனர் சிலைக்கு மரியாதை செலுத்தி மாலை அணிவித்து துவக்கி வைத்தார்.
பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நிறுவனர் பாடல் பாடப்பட்டது. FDP ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பா.மாலதி வரவேற்பு உரையாற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை உரையாற்றினார். இந்த FDPயின் முக்கியத்துவத்தை சுருக்கமாகக் கூறினார்.
பின்னர், எங்கள் கல்லூரி இயக்குநர் டாக்டர் எம். அருளரசு அவர்கள் உரையாற்றி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தார். கல்லூரி செயலாளர் திரு. எம்.சம்பசிவம் அவர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து, பேராசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.
TIDCOவின் பயிற்சியாளர்களான திரு. எம்.ரஜேஷ் மற்றும் திருமதி. எஸ்.புவனா அவர்கள், 6 நாட்கள் திட்டம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பற்றி அறிவைப் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை விளக்கினர்.
நிறைவாக, ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பா.மாலதி, ஆசிரியர் / சிவில் நன்றியுரையை வழங்கினார். தேநீர் இடைவெளிக்குப் பிறகு, பயிற்சியாளர்களால் பாடம் முழுவீச்சில் துவங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 20திற்கும் மேற்பட்ட பட்டைய கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். விழாவை சிறப்பிக்க நமது கல்லூரியின் துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் மக்கள் திரளாக பங்கேற்றன.
-பவானி கார்த்திக்