அழகான சருமத்திற்கு இயற்கையாக ஸ்கின் மாஸ்சுரைஸ் டிப்ஸ் ..!
கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக உள்ளதால் நம் சருமம் ஆனது ஈரப்பதத்தை இழந்து வறட்சியாக காணப்படும் இதனால் நம் சருமம் ஆனது இளமையிலே சுருக்கம் அடைந்துவிடுகிறது. இந்த சரும வறட்சி, முகசுருக்கம் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைக்க எளிமையான முறையில் மாஸ்சுரைசர்கள் தயாரிக்கலாம் வாங்க..!
இயற்கை மாஸ்சுரைசர்கள்:
* தேங்காய் எண்ணெய் மற்றும் தேனை சம அளவு எடுத்து நன்கு கலந்து அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தேய்க்கவும்.
* பின்னர் 20-30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் நம் சருமம் ஈர்ப்பதத்துடனும் மென்மையாகவும் இருக்கும்.
* இதில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
* ஒரு ஸ்பூன் பாலாடையை நன்கு பழுத்த ஒரு வாழை பழத்துடன் மசித்து, பின் அதனை முகத்தில் அப்ளை செய்யவும்.
* 20 நிமிடங்களுக்கு பின் வெண்ணீரில் நனைத்து எடுத்த துணியை கொண்டு துடைத்து எடுக்கவும்.
* அது சருமதிற்கு ஈரபதத்தையும் மற்றும் தேவையான சத்துகளையும் தருகின்றது.
* பப்பாளி பழத்தை நன்கு அரைத்து கொண்டு அதனுடன் வெண்ணையை கலந்து முகத்தில் போடுவதால் முகம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* அதுமட்டுமின்றி பப்பாளி பழமானது சூரிய ஒளியால் வருகின்ற ஸ்கின் அலர்ஜியை போக்குகிறது.
* கற்றாழையை 1 ஸ்பூன் எடுத்து க்ரீன் டீயுடன் கலந்து அரைத்து மாய்ஸ்சு ரைசராக அப்ளை செய்தால் முகம் வறட்சி அடையாமல் எப்பொழுதும் முகம் தங்கம் போன்று ஜொலிக்கும்.
* 2 ஸ்பூன் ஓட்ஸை அரைத்து எடுத்துக் கொள்ளவும் அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து, பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துகொள்ளவும்.
* அறைத்த இந்த பேஸ்டை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி, ஊற வைக்க வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பொலிவுடனும் , ஈரப்பதமாகவும் இருக்கும்.
* ஓட்ஸ் சருமத்தில் உள்ள எண்ணை திட்டுகள் மற்றும் இறந்த செல்களை நீக்க உதவும்.
மேலே கூறிய மாய்ஸ் சுரைசர்கள் மட்டுமின்றி ஷியா எண்ணெய், அவகேடோ பழம், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய், வெள்ளரிக்கா, தயிர், விளக்கெண்ணெய் ,மற்றும் ரோஜா பன்னீர் ஆகியவற்றையும் மாஸ்சுரைசராக பயன்படுத்தலாம்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..