திருச்சிக்கு வந்த விமானத்தில் 12லட்சத்து ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பொம்மைக்குள் மறைத்து கடத்தி வந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை
இன்று காலை கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் விமானம் வந்தடைந்தது. விமானத்தில் வந்த பயணிகளின், கடவுச்சீட்டு ஆவணங்கள் மற்றும் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த பெட்டியில் தங்கத்தை
விளையாட்டு பொம்மை, ஜீப், கூண்டு ஆகியவற்றில் நூதன முறையில் மறைத்து கடத்தி வந்தது அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த தங்கத்தின் எடை 216.500 கிராம் எனவும், அதன் மதிப்பு 12லட்சத்து 84ஆயிரம் ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த தங்கத்தை யாருக்காக அந்த பயணி கொண்டு வந்தார். கொடுத்து அனுப்பியது யார்? என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.