அரசு பள்ளி கழிவறையில் பாம்பு..!! பாம்பு கடித்து மாணவி மருத்துவனமனையில் அனுமதி..!!
குடியாத்தம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பாம்பு கடித்து மாணவி தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஓலக்காசி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர், கடந்த சில தினங்களாக பள்ளியில் பாம்புகள் இருப்பதாக மாணவர்கள் பலரும் பள்ளி நிர்வாகத்தில் தெரிவிதுள்ளனர்.
ஆனால் பள்ளி நிர்வாகம் அதை பொருட் படுத்தாமல் செயல் பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று பள்ளி திறக்கப்பட்ட பின் பள்ளியில் படிக்கும் ஆலாம்பட்டரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவஞானம் என்பவரின் மகள் பூவிகா, 7ம் வகுப்பு படித்து வருகிறாள், இன்று காலை பள்ளிக்கு சென்றவுடன் பள்ளி கழிவறைக்கு சென்றுள்ளார்.
அங்கு பதுங்கி இருந்த பாம்பு பூவிகாவின் காலில் கடித்துள்ளது, இதனால் கதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த பூவிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி வளாகத்துக்குள் கழிப்பறைக்குச் சென்ற மாணவியை பாம்பு கடித்த சம்பவம், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.