“இந்தியாவில் இதுவரை 433 பேர் உயிரிழப்பு..” மத்திய அமைச்சர் சொல்வது அயோக்கிய தனம் ராமகிருஷ்ணன் பேட்டி..!!
மனித கழிவுகளை மனிதனே அகற்றியதால் இந்தியாவில் 433 பேர் உயிரிலந்ததாக மத்திய அமைச்சரே கூறுவது வேதனையாக உள்ளது.. மார்க்சிஸ்ட் கம்பியுனிஸ்ட் கட்சி ராமகிருஷ்ணன் தருமபுரியில் பேச்சு…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்தபோது மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியின் போது கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 433 பேர் உயிரிழந்து இருப்பதாக உள்துறை அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“புல்லட் ரயில் விடும் நாம் மனிதர்கள் மூலமே மனித கழிவுகளை அகற்றி அதற்கு உயிர்களை பலி கொடுத்து வருகிறோம்”. இப்பணிகளுக்கு இயந்திரங்களை வாங்க உள்ளாட்சி அமைப்புகளிடம் பணம் இல்லை என மத்திய அமைச்சர் கூறியிருப்பது அயோக்கியத் தனம். மத்திய அரசே இதற்கான நிதியை வழங்கி இயந்திரங்கள் வாங்கித் தர வேண்டும்.
இதுதவிர, மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை அரசு உருவாக்கித் தர வேண்டும். தமிழக அரசு இவ்வாறான பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகா மாநில அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தற்போது பெய்த கனமழையின்போது தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் தமிழகத்தை நோக்கி திறந்து விட்டுள்ளனர். இதில் சுமார் 70 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகிறது.
முந்தைய மாதங்களிலேயே தண்ணீரை திறந்திருந்தால் அது வீணாகாமல் பயன்பட்டிருக்கும். ஒகேனக்கல் உபரி நீரை நீரேற்றும் திட்டம் மூலம் தருமபுரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வழங்கி பின் தங்கிய தருமபுரி மாவட்டத்தை வளப்படுத்தனும். ஆமை வேகத்தில் நடந்து வரும் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெறும்போது உயிரிழப்பவர்களின் உடல்களை கொண்டு செல்ல ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அரசு சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மத்திய பட்ஜெட் உரையில் தமிழகம் உட்பட ஒவ்வொரு மாநிலத்தின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும் என எதிர்பார்ப்’பது அவசியமற்றது என அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். தமிழக நலனை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியாக பாமக இருக்க வேண்டுமே தவிர, பாஜக-வின் ஊதுகுழலாக இருக்க விரும்பக் கூடாது.
இவ்வாறு கூறினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..