இந்தியா முழுவதும் 2022ம் ஆண்டில் சாலை விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஒன்றிய சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
ஒரு ஒரு ஆண்டும் அந்த ஆண்டின் முடிவில் நடந்துள்ள சம்பவங்களை குறித்த தகவல்களை அல்லது தரவுகளை ஒன்றிய அரசு துறை வெளியிடுவது வழக்கமானது. இந்நிலையில் 2022ம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில் ஒன்றிய போக்குவரத்து துறை அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஒரு ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் மட்டும் இதுவரை 1.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டு தோறும் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் அதில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேரு கடும் விதிமுறைகளை நடைமுறைபடுத்தி வருகிறது. இருப்பினும் ஒரு ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 1.5 பேர் உயிரிழப்பது அனைவரிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.