பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
சிக்கன்
தயிர் 1/4 கப்
வெங்காயம் 1
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 3
கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
முந்திரி ஒரு கைப்பிடி
மிளகு 2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1 1/2 ஸ்பூன்
கடுகு எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில் சிக்கனை சுத்தம் செய்து பின் அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து கலந்து ஃபிரிஜ்ஜில் மூன்று மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
சூடான நீரில் முந்திரி பருப்பை சேர்த்து ஊறவைத்து பின் அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனில் கடுகு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காய்ந்த மிளகாய், மிளகு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் ஊறவைத்த சிக்கன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் இதில் அரைத்த முந்திரி விழுது மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சிக்கனை வேகவைக்க வேண்டும்.
சிக்கன் வெந்ததும் கடைசியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் தயார்.