ரஜினியைக் கிண்டலடித்த நபர் கைது..!

நடிகர் ரஜினியைப் பார்த்து நீங்கள் யார் எனக் கேட்ட நபர், தற்போது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  துப்பாக்கிச்சூட்டில் காயமுற்றவர்களை  நடிகர் ரஜினிகாந்த்  கடந்த 2018 ஆம் ஆண்டு நேரில் சந்தித்தார். அப்போது, சந்தோஷ் என்பவர், ரஜினியை பார்த்து யார் நீங்க என்று கேலியாக கேட்டார். அந்த நேரத்தில் அந்த செய்தி இணையதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சாம்குமார் என்பவர் தனது இருசக்கரவாகனம் திருடு போயுள்ளதாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில்  பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனம் திருடியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த செய்தி சமூக வலைதளத்தில் #நான்தாப்பா_பைக்_திருடன் என்ற ஹாஷ்டேக்கில் ட்ரெண்டாகி வருகிறது.

What do you think?

இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் உயிரிழந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்