“எனது மார்பகத்தை மாற்ற வேண்டும் என்று சிலர் கூறினார்கள்” – சமீரா ரெட்டி
தமிழ் சினிமாவில் வெளியான வாரணம் ஆயிரம், அசல் மற்றும் வெடி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சமீரா ரெட்டி.
இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் நடித்துள்ளார். பின்னர் கடந்த 2024 ஆண்டு அக்ஷய் வர்டே என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதிலிருந்து விலகிய இவர் சமுக வளைதலத்தில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.அதாவது சமூக வளைத்தலத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடும் போது சிலர் பில்டர் பயன்படுத்துமாறு கூறியுள்ளனர்.
ஆனால் அதற்கு அவர் இதுதான் என்னுடைய கலர் மற்றும் இதுதான் என்னுடைய எடை என்பதால் நான் நானாகவே இருக்க விரும்புவதாக கூறிவிட்டார்.
அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிலர் அவரிடம் மார்பக அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளனர். இதைக் கேட்டு முதலில் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆனால் அதனால் எந்த பிரச்சனையும் வராது என சிலர் கூறியுள்ளனர். இருப்பினும் சமீரா ரெட்டி ஏற்கவில்லை. மேலும் மார்பக அறுவை சிகிச்சை செய்யாமல் நான் தவிர்த்தது மிகவும் நல்லது என்று கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்