‘பள்ளி சுவரின் மீது ஏறி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிட் பேப்பர்களை வழங்கிய அதிர்ச்சி சம்பவம்’

மகாராஷ்ட்டிராவில் பள்ளி சுற்று சுவரின் மீது ஏறி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிட் பேப்பர்களை வழங்கிய சம்பவம் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கான 10ம் வகுப்பு தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் யாவத்மால் மாவட்டம் மகாகோன் பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் நேற்று இந்த 10ம் வகுப்பு தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, வெளியிலிருந்து வந்த சிலர் பள்ளியின் சுற்று சுவரில் ஏறி மாணவர்களுக்கு பிட் பேப்பர்களை வழங்கி தேர்வில் காப்பியடிக்க உதவி செய்துள்ளனர்.

தேர்வு முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதையும் மீறி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இத்தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தேர்வு மைய அதிகாரி கூறுகையில், “பள்ளி வளாகத்தின் சுற்றுசுவர் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால், பாதுகாப்பை அதிகரிக்கும்படி போலீசாரிடம் கேட்டுள்ளோம். முறைகேடு இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு பள்ளி நிர்வாகம் உறுதி எடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

What do you think?

வைகோவின் கோரிக்கைக்கு வெளியுறவு அமைச்சகம் பதில்

விஷால் பெயரை கூறி 47 லட்ச ரூபாய் பண மோசடி செய்த பிரபல இயக்குனர் கைது!