குழந்தையின் இரத்த சோகை நோயை சரி செய்ய சில டிப்ஸ்..!
இந்தியாவில் அதிக அளவு குழந்தைகள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான தீர்வு குறித்து பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவில் இரும்புச்சத்து, புரத்தச்சத்து மற்றும் வைட்டமின் பி2 ஆகிய சத்துக்கள் ரத்த சக்தியை உற்பத்தி செய்கிறது. உடலில் இந்த வகையான சத்துக்கள் குறையும் பொழுது ரத்தசோகை நோயை ஏற்படுத்தும்.
இந்த நோயை சரி செய்ய சிலவகையான உணவு பொருட்களை எடுத்துக்கொண்டாலே போதும்.
* வாரத்திற்கு மூன்று முறையாவது முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை, பொன்னாங்கன்னி கீரை, அரைக்கீரை, பாலக்கீரை மற்றும் அகத்திக்கீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* முளைகட்டிய பாசிப்பயிரிகளை காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
* இரவில் தூங்க செல்லுவதற்கு முன் பேரிட்சைபழம் மற்றும் பால் சாப்பிட்டுவிட்டு உறங்கலாம்.
* காரட் ஜூஸ் அல்லது பீட்ருட் ஜூஸில் தேன் கலந்து சாப்பிடலாம்.
* முருங்கை கீரையை சூப் செய்துக் குடிக்கலாம்.
* தினமும் ஒரு மாதுளைப் பழம், தர்பூசணி பழம் மற்றும் அத்திப்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி