குழந்தைக்கு வரும் வியர்குருவை விரட்ட சில டிப்ஸ்..!!
கோடை வெப்பத்தில் பலருக்கும் வியர்க்குரு அதிகமாக வரும்.., அதை சரி செய்ய வியர்க்குரு பவுடர் உபயோகிப்பார்கள். வியர்க்குரு பவுடர் உபயோகித்தும் வியர்க்குரு தீரவில்லையா..? இனி கவலை வேண்டாம்.. இதை செய்து பாருங்கள்.
சருமத்தின் அடியில் வியர்வை தங்கிவிடுவதால் அவை சரியாக வெளியேறாமல் வியர்குருவாக வெளியேறி விடுகிறது. ஆரம்பத்தில் சின்ன சின்ன தாக தோன்றி, அரிப்பு எரிச்சல் என ஏற்படுத்துகிறது.
இதை சரி செய்ய சிலர் வியர்க்குரு பவுடர் உபயோகிப்பார்கள்.., ஆனால் பவுடர் உபயோகிக்கும் பொழுது சரும துவாரங்களை அடைத்து விடுவதால்.., இன்னும் அதிக வியர்குருவை உண்டாக்குகிறது.
* இதை சரி செய்ய தினமும் இரண்டு வேலை குளிக்க வேண்டும்.
* ஒரு பக்கெட் வெது வெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடா மாவை சேர்த்து குளிக்க வேண்டும்.
* சோப்பை நேரடியாக முகத்திற்கு பயன் படுத்தாமல், மென்மையான டவல் கொண்டு சிறிது சிறிதாக நீரில் நனைத்து துடைத்து விட்டு பின் சோப்பு உபயோகிக்க வேண்டும்.
* வியர்க்குரு உள்ள குழந்தைகளுக்கு காட்டன் துணிகள் மட்டும் உடுத்த வேண்டும்.
* அரிப்பு அதிகமாகும் பொழுது காட்டன் துணியை கொண்டு குளிர்ந்த நீரில் நனைத்து ஒற்றி எடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் 15 நாளில் வியர்க்குரு சரியாகி விடும். அதிலும் சரியாக வில்லை என்றால் அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை செய்துகொள்ளலாம் என மருத்துவர் “கீதா மத்தாய்” கூறினார்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி