கருமையான உதட்டை அழகாக மாற்ற சில டிப்ஸ்..!!
பலருக்கும் முகம் அழகாக இருந்தாலும் உதடு கருப்பாக இருக்கும். இந்த கருமையை போக்க சில டிப்ஸ்கள் பார்க்கலாம்.
எலும்பிச்சை பழம் :
எலும்பிச்சை சாறு கருமையான உதடுகளை ஒளிரச் செய்யும். தன்மை கொண்டது. ஒரு பருத்தி துணியில் எலும்பிச்சை சாறை தொட்டு உதட்டில் தடவ வேண்டும். பின் 10 நிமிடம் கழித்து நீரில் கழுவி விட்டால், உதடு கருமை நீங்கி விடும்.
தேன் பாதம் எண்ணெய் :
தேன் மற்றும் பாதம் எண்ணையை சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து உதட்டில் தடவ வேண்டும். தேன் மற்றும் பாதாமிற்கு ஒளிரும் தன்மை இருப்பதால், கருமையான உதட்டின் தோற்றத்தை மறைத்து விடும்.
பீட்ரூட் ஜூஸ் :
பீட்ரூட் சாறை எடுத்து தினமும் ஒரு 10-15 நிமிடம் உதட்டில் தடவி பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால். உதட்டின் கருமை நீங்கி விடும். குறைந்தது வாரத்திற்கு 3முறையாவது இதை செய்ய வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..