கோவை கிணத்துக்கடவு அருகே மாமியார் உட்பட இருவரை கத்தியால் குத்திய மருமனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் ஆறுமுகம் – ஜோதிமணி தம்பதி. இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜோதிமணி கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஜோதிமணியை அழைத்துச் செல்ல கோவை வந்த ஆறுமுகத்துடன் மாமியார் காமாட்சி (37), மற்றும் வீட்டின் உரிமையாளர் ஈஸ்வரன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் காமாட்சி மற்றும் ஈஸ்வரன் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
படுகாயமடைந்த இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.