சோனியாகாந்தி பதவி ஏற்பு..!! அடித்த முதல் சிக்ஸ்..?
நாடாளுமன்ற மாநிலங்களவையின் 54 உறுப்பினர்கள் நேற்று ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் என்பது பெருமைக்குரியது. அதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் முடிவடைந்தது. அப்போது அவருடன் சேர்ந்து 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர்.
அதே சமயம் அந்த பதவிகளுக்கு பிற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் “ராஜஸ்தான்” மாநிலத்தின் மாநிலங்களவை எம்பியாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து இன்று, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றனர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தற்போது பதவியேற்றுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து மலர்கள் கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பின் இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள் எனவும் பதிவிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தை தொடர்ந்து வழிநடத்தி வரும் அவர், மக்களவையில் கடந்த 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஒரு பெண் தொடர்ந்து 25 ஆண்டுகளாக இதில் பதவிவகித்துள்ளார் என்ற பெருமை இவருக்கு உண்டு. எனவே நானும் எங்களின் சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் பழைய சோனியா காந்தியை எதிர்பார்கிறோம். எதிர்கட்சிகளை சிக்ஸர் அடித்து காலி செய்யும் அவரின் அரசியல் யுக்தியை பார்க்க ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறோம் என கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..