நாட்டின் பழமை வாய்ந்த கட்சியான காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவருக்கான தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்காக மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் 9,300 பேரும் தமிழகத்தில் 711 பேரும் வாக்களித்தனர். இந்த தேர்தலில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி என நேரு குடும்பத்தை சார்ந்த யாரும் போட்டியிடவில்லை, 22 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே நேரு குடும்பம் போட்டியிடாத முதல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல்.
தேர்தல் முடிந்தவுடைந்த நிலையில் இன்று இரவே வாக்குபெட்டிகள் டெல்லிக்கு கொண்டு சென்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 19ம் தேதி முடிவு அறிவிக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.