சோனியாகாந்தி வைத்த கோரிக்கை..!! ஆடி போன அரசியல் கட்சி பிரமுகர்கள்..!!
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஆலோசனை கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், ஒரே குடும்பத்தைச் சார்ந்த நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள கட்சி சார்ந்த நிர்வாகிகளின் இடங்களை நிரப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட மீண்டும் மீண்டும் ஒரே நபருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது எனவுன் தெரிவித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் கட்டுப்பட வேண்டும் என்றும், உட்கட்சி பூசலுக்கு இடம் அளிக்காமல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..