காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்..!
முருங்கைகாயை ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல் பயன்படுத்தி சிறிது முருக்கி பார்த்தால் எளிதாக வளைந்தால் அது நல்ல காய் வாங்கலாம்.
சின்ன வெங்காயம் பழையதை வாங்குவதே நல்லது. இரண்டு பல் தெளிவாக முத்து முத்தாக இருப்பதௌ பார்த்து வாங்கலாம்.
கத்தரிக்காயை தோல் மெல்லியதாக இருப்பது போல் பார்த்து வாங்கலாம்.
பூண்டு பல்லி பல்லாக வெளியே தெரிவது போல் இருப்பதை வாங்கலாம்.
பச்சை மிளகாயில் நீண்டது காரம் குறைவாக இருக்கும் ஆனால் குண்டாக இருப்பது சற்று காரம் அதிகமாக இருக்கும்.
முள்ளங்கியின் தோலை லேசாக கீறி பார்க்க வேண்டும். தோல் மென்மையாக இருந்தால் அது நல்ல முள்ளங்கி.
உருளைக்கிழங்கை கீறினால் தோல் அப்படியே வரணும். உருளைக்கிழங்கை முளை இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும்.
சௌசௌ மேல் பகுதி பெரிய விரிசலாக இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும்.
முட்டைக்கோஸ் இலைகள் சற்று பச்சை நிறத்தில் கலந்து இருக்க வேண்டும். அளவில் சிறியது சுவை மிகுந்து இருக்கும்.
வெண்டைக்காய் நுனியை உடைத்தால் சட்டென்று உடைய வேண்டும். உடையாமல் வளைந்தால் வாங்க கூடாது.
பீர்க்கங்காய் முழுவதும் ஒரே அளவில் முழுவதும் பச்சை நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.
அவரைக்காய் வாங்கும்போது அதன் விதைகளை அமுக்கி பார்த்து அது சிறியதாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.
சேப்பங்கிழங்கு முளை விடாமல் சற்று உருண்டையாக இருப்பதை பார்த்து வாங்கவும்.
காலிஃபிளவர் பூக்கள் இடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக இருக்க வேண்டும்.
பீன்ஸ் நன்றாக பச்சை நிறமாக உடைத்தால் அப்படியே உடைய வேண்டும்.